வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி 1.1.2024-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் 17-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அக்டோபர் 17-ந்தேதி முதல் நவம்பர் 30-ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம், ஆதார் இணைப்பு போன்ற பணிகளை மேற்கொள்ளலாம்.
இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி 5-ந்தேதி வெளியிடப்படும். www.voters.eci.gov.in, https://voterportal.eci.gov.in ஆகிய இணையதள முகவரி மற்றும் வாக்காளர் உதவி கைபேசி செயலி ஆகியவற்றின் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். 1.1.2024, 1.4.2024, 1.7.2024 மற்றும் 1.10.2024 ஆகிய தேதிகளில் 18 வயது பூர்த்தியடைபவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.