தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் கண்காணிப்பதற்காக மாவட்ட அளவில் 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 27ஆம் தேதி தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 6. 11 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதற்கான சரிபார்ப்பு பட்டியல் பணிகள் தொடங்கியுள்ளன. இவற்றை கண்காணிப்பதற்காக மாவட்ட அளவில் 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி கமிஷனர் மைதிலி ராஜேந்திரன், சிறு தொழில்கள் கழக மேலாண்மை இயக்குனர் மதுமதி, ஜவுளிகள் ஆணையர் வள்ளலார், தமிழ்நாடு மீன்வளத்துறை ஆணையர் பழனிச்சாமி,நில சீர்திருத்த ஆணையர் வெங்கடாசலம், வேளாண்மை ஆணையர் சுப்ரமணியன், நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனர் சங்கர், திருப்பூர் மாவட்டங்களுக்கு தொழில்நுட்ப கல்வி ஆணையர் வீரராகவ ராவ், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி ஆணையர் ஆணையர் சுந்தரவல்லி, மேலாண்மை இயக்குனர் சரவணவேல்ராஜ் ஆகியோர்கள் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை நேற்று தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு நேரில் அழைத்து ஆலோசனை வழங்கினார்.