விரைவில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்காக கூடுதல் தேர்தல் அதிகாரிகளை நியமிக்க தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் எழுதி இருந்தார்.
பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்திற்கு கூடுதல் தேர்தல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக சங்கர்லால் குமாவத், இணைத்தேர்தல் அதிகாரிகளாக ஸ்ரீகாந்த் மற்றும் அரவிந்தன் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு முன்னதாக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகளை நியமனம் செய்ய வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதாசாகு கடிதம் எழுதியது இதில் குறிப்பிடத்தக்கது.