சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் நியமனம்

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி, ஓய்வுபெற்றதை அடுத்து துரைசாமி பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவரும் சில நாட்களில் ஓய்வுபெற்றதை அடுத்து அடுத்த பொறுப்பில் மூத்த நீதிபதியாக இருந்த டி.ராஜா சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தற்போதைய பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக இருக்கக்கூடிய வைத்தியநாதனை பொறுப்பு தலைமை […]

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி, ஓய்வுபெற்றதை அடுத்து துரைசாமி பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவரும் சில நாட்களில் ஓய்வுபெற்றதை அடுத்து அடுத்த பொறுப்பில் மூத்த நீதிபதியாக இருந்த டி.ராஜா சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

தற்போதைய பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக இருக்கக்கூடிய வைத்தியநாதனை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். நாளை முதல் நீதிபதி வைத்தியநாதன் தலைமை நீதிபதி பணிகளை மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu