சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி துறையில் 130 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை

January 21, 2023

சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி துறையில் 130 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இது தொடர்பாக தமிழக அரசு நேற்று செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தின் இந்திய மருத்துவம் - ஓமியோபதி துறையின் கீழ் மாநிலம் முழுவதும் 1,541 சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி, யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவுகள் உள்ளன. கரோனா தொற்றின்போது, சித்தா மருத்துவப் பிரிவுகளில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்திய மருத்துவத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும் வகையில், […]

சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி துறையில் 130 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தின் இந்திய மருத்துவம் - ஓமியோபதி துறையின் கீழ் மாநிலம் முழுவதும் 1,541 சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி, யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவுகள் உள்ளன. கரோனா தொற்றின்போது, சித்தா மருத்துவப் பிரிவுகளில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்திய மருத்துவத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும் வகையில், அரசு தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருந்தகங்களில் இப்பிரிவுகளில் காலியாக உள்ள உதவி மருத்துவ அலுவலர்கள் (ஆயுஷ்) பணியிடங்களை நிரப்ப மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்தது.

அதன்படி, தேர்வு செய்யப்பட்ட 130 சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி மருத்துவர்களுக்கு உதவி மருத்துவ அலுவலர் பணிக்கான நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 15 பேருக்கு நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu