ஒரேநேரத்தில் 71 ஆயிரம் பேருக்கு மத்திய அரசில் வேலை வழங்கப்படுகிறது. இதற்கான பணி நியமன உத்தரவுகளை பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக 10 லட்சம் பேருக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி முன்னெடுத்து நிறைவேற்றி வருகிறார். இந்த திட்டத்தைக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22-ந் தேதியன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது அவர் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 75 ஆயிரம் பேருக்கு வேலை வழங்குவதற்கான பணி நியமன உத்தரவுகளை வழங்கினார். இந்த நிலையில், பிரதமர் மோடி, இன்று காணொலிக்காட்சி வழியாக நடைபெறுகிற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் 71 ஆயிரம் பேருக்கு மத்திய அரசில் பணியாற்றுவதற்கான பணி நியமன உத்தரவுகளை வழங்குகிறார்.