தமிழகத்தில் புதிதாக ஆறு மருத்துவ கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் சில மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்கு தேசிய மருத்துவ ஆணையத்திடம் அனுமதி கேட்டிருந்த நிலையில் தற்போது தேசிய மருத்துவ ஆணையம் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு அனுமதி அளித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மயிலாடுதுறை,திருப்பத்தூர், தென்காசி, பெரம்பலூர், அரக்கோணம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளன. மத்திய அரசின் பங்களிப்புடன் அமைக்கப்படும் மருத்துவ கல்லூரிக்கான 25 ஏக்கர் நிலத்தை அடையாளம் காண அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது














