சென்னை மெட்ரோ ரெயில்  - மாதவரம் - சிறுசேரி சிப்காட் வழித்தடத்துக்கு அனுமதி

March 18, 2023

சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்தில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் வழித்தடத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் ரூ.63,246 கோடியில் 118.9 கி.மீ. தொலைவுக்கு நடைபெறுகின்றன. இந்தத் திட்டத்தில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை (3-வது வழித்தடம்) 45.8 கி.மீ. தொலைவுக்கும், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வரை (4-வது வழித்தடம்) 26.1 கி.மீ. தொலைவுக்கும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை (5-வது வழித்தடம்) 47 கி.மீ. தொலைவுக்கும் […]

சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்தில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் வழித்தடத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் ரூ.63,246 கோடியில் 118.9 கி.மீ. தொலைவுக்கு நடைபெறுகின்றன. இந்தத் திட்டத்தில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை (3-வது வழித்தடம்) 45.8 கி.மீ. தொலைவுக்கும், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வரை (4-வது வழித்தடம்) 26.1 கி.மீ. தொலைவுக்கும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை (5-வது வழித்தடம்) 47 கி.மீ. தொலைவுக்கும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டப் பணிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில், மயிலாப்பூரில் 3 நடைமேடைகளுடன் மெட்ரோ ரெயில் நிலையம் அமையவுள்ளது.

இந்த நிலையத்தில் 4 சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்கள் வெவ்வேறு நிலைகளில் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த வழித்தடத்தில் மயிலாப்பூர் (திருமயிலை), இந்திரா நகர், தரமணி உள்ளிட்ட இடங்களில் பக்கிங்காம் கால்வாய் மற்றும் அடையாறு ஆறுகளில் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்நிலையில், மத்திய கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் இதற்கு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீ. தொலைவுக்கு பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu