பிரதமரின் வித்யாலட்சுமி திட்டம் மூலம் மாணவர்களுக்கு தரமான உயர்கல்வி இலவச கடனாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் வித்யாலட்சுமி திட்டம், திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவியை வழங்குவதற்கான மத்திய அரசு புதிய முயற்சியாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், இந்தியாவின் முக்கிய உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் பிணையில்லாமல் கல்வி கடனாக நிதியுதவி பெற முடியும். இந்த திட்டம், தேசிய தரவரிசையில் முதல் 100 இடங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் மாணவர்களுக்கு பயன்படும். மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், இந்த திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.














