விஜயநகராவில் 454 கோடி ரூபாய் செலவில் ஹம்பி சர்க்கரை ஆலை கட்ட கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் நேற்று மாலை கர்நாடக அமைச்சரவை கூட்டம் நடந்தது. பின்னர் சட்டத்துறை அமைச்சர் மாதுசாமி கூறுகையில், விஜயநகராவில் 454 கோடி ரூபாய் செலவில் ஹம்பி சர்க்கரைஆலை கட்ட அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தொழிற்சாலைக்கு 82 ஏக்கர் நிலம் வழங்கப்படும். தொழிற்சாலை அமைப்பதால் 2,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
தட்சிண கன்னடா மாவட்டத்தில் ஏற்றுமதி நிறுவனம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுரங்கத் தொழிலால் பாதிப்படைந்த பகுதிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் திட்டங்களுக்கு அனுமதியளிக்கும் அதிகாரத்தை கர்நாடக சுரங்க சுற்றுச்சூழல் கார்ப்பரேஷனுக்கு அளிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.