பாலஸ்தீன அதிகாரசபை, காசா பகுதியை கட்டியெழுப்பும் திட்டத்தை அரபு தலைவர்கள் முன்மொழிந்துள்ளனர்.
பாலஸ்தீன அதிகாரசபை, காசா பகுதியை கட்டியெழுப்பும் திட்டத்தை அரபு தலைவர்கள் முன்மொழிந்துள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், காசாவை முழுமையாக கைப்பற்றி மீண்டும் கட்டியெழுப்புவதாக அறிவித்திருந்தார், இது அரபு தலைவர்களின் கடும் கண்டனத்தை எழுப்பியது.
முன்னதாக, டிரம்ப் காசாவை கட்டியெழுப்பி, பல வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக கூறினார். ஆனாலும், இதற்கு எதிராக அரபு தலைவர்கள் விரிவான புதிய திட்டத்தை முன்வைத்தனர். இந்த திட்டத்தில் காசாவை பலசர்வதேச ஆதரவில் கட்டியெழுப்ப வலியுறுத்தப்படுகிறது. இந்நிலையில், கெய்ரோவில் நடந்த அரபு லீக் உச்சிமாநாட்டில் "விரிவான அரபுத் திட்டம்" ஏற்றுக்கொள்ளப்பட்டு, சர்வதேச சமூகம் இதற்கு ஆதரவு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.