பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து ஹிஸ்புல்லா நீக்கம் - அரபு லீக்

July 2, 2024

பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பின் பெயரை அரபு லீக் நீக்கியுள்ளது. பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் பெயரை அரபு நாடுகளின் கூட்டமைப்பான அரபு லீக் நீக்கி உள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் துணை பொது செயலாளர் ஹோசம் சாகி கூறியதாவது, நாங்கள் இதுவரை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் ஹிஸ்புல்லா அமைப்பை சேர்த்திருந்தோம். ஆனால் அவர்களை பயங்கரவாதிகள் என்று அழைப்பதால் அவர்களுடன் தகவல் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியாத […]

பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பின் பெயரை அரபு லீக் நீக்கியுள்ளது.

பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் பெயரை அரபு நாடுகளின் கூட்டமைப்பான அரபு லீக் நீக்கி உள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் துணை பொது செயலாளர் ஹோசம் சாகி கூறியதாவது, நாங்கள் இதுவரை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் ஹிஸ்புல்லா அமைப்பை சேர்த்திருந்தோம். ஆனால் அவர்களை பயங்கரவாதிகள் என்று அழைப்பதால் அவர்களுடன் தகவல் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியாத நிலை உள்ளது. இந்த நிலையை போக்குவதற்காக பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் இருந்து ஹிஸ்புல்லா ஆயுத குழுவினரை நீக்க உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன என்றார்.

ஹிஸ்புல்லா அமைப்பு முன்பை விட அதிக பலம் பெற்றுள்ளது. இந்நிலையில், இஸ்ரேலுடன் ஹிஸ்புல்லா போரிட்டால் அது பேரழிவை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை செய்கின்றன. இந்நிலையில், போரை தவிர்க்கும் முயற்சிகளை மேற்கொள்ளவே ஹிஸ்புல்லாக்களை பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து அரபு லீக் நீக்கி உள்ளதாக பரவலாக கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu