ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை மாளவிகா பன்சோத் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன் தொடர் பின்லாந்தில் நடைபெற்று வருகிறது. இந்திய வீராங்கனை மாளவிகா பன்சோத், இன்று நடந்த போட்டியில் சீன தைபே வீராங்கனையை எதிர்கொண்டார். அதில் அவர் 21-19, 24-22 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். மாளவிகா, 57 நிமிடங்களில் போட்டியை வென்றார்.