ஐ நா சபையின் வானிலை அமைப்பின் தலைவராக, முதல் முறையாக பெண் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அர்ஜென்டினாவை சேர்ந்த பிரபல முன்னணி வானிலை ஆய்வாளர் செலஸ்டி சாலோ, மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை பெற்று, ஐ நா சபை வானிலை அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
செலஸ்டி சாலோ, கடந்த 2014 ஆம் ஆண்டு முதல், அர்ஜென்டினாவின் தேசிய வானிலை அமைப்பின் இயக்குனராக பணியாற்றி வருகிறார். மேலும், 2015 ஆம் ஆண்டு முதல் WMO கவுன்சில் உறுப்பினராக உள்ளார். மேலும், வானிலை தொடர்பான விவகாரங்களில் தேர்ந்த அனுபவம் வாய்ந்தவராக சொல்லப்பட்டுள்ளார். பருவநிலை மாற்றம் காரணமாக, உலகமே பாதிப்புகளை சந்தித்து வரும் சூழலில், ஐநாவின் வானிலை அமைப்பு பொறுப்புமிக்க பங்கு வகிக்கிறது. இந்நிலையில், அதன் தலைமை பொறுப்பில் செலஸ்டி சாலோ நியமிக்கப்பட்டுள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.














