ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற அரியானா வீராங்கனை

அரியானவைச் சேர்ந்த கிரண் பஹல் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் மாநிலங்களுக்கு இடையிலான 63 ஆவது தேசிய தடகள சாம்பியன்ஸ் போட்டி நேற்று தொடங்கியது. இதில் அரியானாவைச் சேர்ந்த கிரண் பஹல் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தின் அரை இறுதி சுற்றில் 50.92 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்துள்ளார். ஒலிம்பிக் தகுதிக்கு 50.95 வினாடி இலக்காகும். இதனை அடைந்த கிரண் பஹல் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதுகுறித்து கிரண் […]

அரியானவைச் சேர்ந்த கிரண் பஹல் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் மாநிலங்களுக்கு இடையிலான 63 ஆவது தேசிய தடகள சாம்பியன்ஸ் போட்டி நேற்று தொடங்கியது. இதில் அரியானாவைச் சேர்ந்த கிரண் பஹல் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தின் அரை இறுதி சுற்றில் 50.92 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்துள்ளார். ஒலிம்பிக் தகுதிக்கு 50.95 வினாடி இலக்காகும். இதனை அடைந்த கிரண் பஹல் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதுகுறித்து கிரண் பஹல் கூறுகையில் "ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை, இது தனக்கே ஆச்சரியமாக உள்ளது. இதை விட பெரிய சாதனை ஏதும் கிடையாது" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu