அரியானாவில் நாள்தோறும் இலவச டயாலிசிஸ் சேவை வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.
அரியானாவில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 48 இடங்களை வென்று, நயாப் சிங் சைனி இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்றார். அதனை தொடர்ந்து மாநிலத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாள்தோறும் சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சேவை வழங்கப்படும் என அரியானா அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம், நோயாளிகள் மாதம் ₹20,000 முதல் ₹25,000 செலவிட வேண்டிய செலவுகள் அரசு எடுத்துக் கொள்ளும் என முதல்வர் கூறியுள்ளார்.