சூடான் நாட்டில், ராணுவம் மற்றும் துணை ராணுவம் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. அண்மைக்காலமாக, இந்த உள்நாட்டுப் போர் வலுத்துள்ளது. இந்நிலையில், சூடான் தலைநகர் கார்டூமில் உள்ள சந்தை பகுதியில், துணை ராணுவப் படையினரை குறிவைத்து, ராணுவம் குண்டு வீச்சு தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது. இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
அண்மையில், ராணுவம் மற்றும் துணை ராணுவம் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இது தோல்வியில் முடியவே, ராணுவம் தாக்குதலில் இறங்கியுள்ளது. சூடான் நாட்டில் நடந்து வரும் இந்த உள்நாட்டு போரில், இதுவரை 1800 பேர் பலியாகி உள்ளதாக அதிர்ச்சி தரும் புள்ளி விவரப் பட்டியல் வெளிவந்துள்ளது.