ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில், இந்திய எல்லையை தாண்டி பாகிஸ்தான் நாட்டின் ட்ரோன் பறந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் மீது இந்திய ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
நேற்று இரவு இந்திய நிலப்பரப்புக்குள் பாகிஸ்தான் ட்ரோன் நுழைந்தது. அதன் பிறகு, இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதும், மீண்டும் பாகிஸ்தான் நிலப்பரப்புக்குள் திரும்பியதாக கூறப்படுகிறது. எனினும், குறிப்பிட்ட பகுதியில் இந்திய ராணுவத்தினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த தகவல்களை தெரிவிக்க அழைப்பு விடுத்துள்ளனர். மேலும், ஜம்மு காஷ்மீரில், ஆயுதங்கள், வெடிபொருட்கள், ட்ரோன்கள் குறித்த தகவல் தெரிவிப்பவர்களுக்கு 3 லட்ச ரூபாய் வெகுமானம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.