ராஜஸ்தானில் வீட்டுக்குள் ராணுவ விமானம் விழுந்து 3 பேர் பலி

ராஜஸ்தானில் வீட்டுக்குள் ராணுவ விமானம் விழுந்து 2 பெண்கள் உள்பட 3 பேர் பலியாகியுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் சூரத்கர் விமானப்படை தளத்தில் இன்று காலை இந்திய விமான படைக்கு சொந்தமான மிக்-21 ரக போர் விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்தது. அதில் பயணம் செய்த விமானி பாராசூட் மூலம் விமானத்தில் இருந்து கீழே குதித்தார். அந்த விமானம் ஹனுமந்த் ஹார்க் அருகே பஹ்லோக்நகர் என்ற […]

ராஜஸ்தானில் வீட்டுக்குள் ராணுவ விமானம் விழுந்து 2 பெண்கள் உள்பட 3 பேர் பலியாகியுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் சூரத்கர் விமானப்படை தளத்தில் இன்று காலை இந்திய விமான படைக்கு சொந்தமான மிக்-21 ரக போர் விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்தது. அதில் பயணம் செய்த விமானி பாராசூட் மூலம் விமானத்தில் இருந்து கீழே குதித்தார். அந்த விமானம் ஹனுமந்த் ஹார்க் அருகே பஹ்லோக்நகர் என்ற கிராமத்தில் உள்ள வீட்டின் மேல் பயங்கர சத்தத்துடன் விழுந்து நொறுங்கியது. இதில் அந்த வீட்டின் அருகே இருந்த 2 பெண்கள் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

தகவல் அறிந்து போலீசாரும் மீட்பு படையினரும் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியை மேற்கொண்டனர். விமான விபத்து குறித்து கண்டறிய விரிவான விசாரணை நடத்த விமானப்படை உத்தரவிட்டு உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu