அமெரிக்க ராணுவத்தில் ஐந்து சதவீத ஆட்களை குறைக்க அரசு முடிவு செய்துள்ளது.
அமெரிக்க ராணுவம் உலகிலேயே சக்தி வாய்ந்த ஒன்றாக உள்ளது. அமெரிக்க தரைப்படையில் சுமார் 4,50,000 வீரர்கள் உள்ளனர். அவர்களுடன் ஐம்பதாயிரம் ரிசர்வ் படை வீரர்களும் பணி புரிகின்றனர். இந்நிலையில், சிக்கன நடவடிக்கை காரணமாக அந்நாடு அமெரிக்க ராணுவத்தில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன் காரணமாக இராணுவத்தில் ஆட்குறைப்பு செய்ய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி அமெரிக்க ராணுவத்தில் 5%, அதாவது சுமார் 25000 தரைப்படை ராணுவ வீரர்களை குறைக்க முடிவு செய்துள்ளனர். இதற்கு பதிலாக நவீன ஆயுதங்கள் உற்பத்திக்கான செலவை அதிகரிக்க உள்ளதாக ராணுவ உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.