தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று பணியில் உள்ள ஊடகத்துறையினர் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. மொத்தம் ஏழு கட்டமாக நடைபெற உள்ள தேர்தலில் முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் தமிழக உள்ளிட்ட சில மாவட்டங்களில் நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்நிலையில் ஊடகத்துறையினர் தேர்தல் வாக்குப்பதிவு நாள் அன்று தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சுற்றறிக்கை அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதில் ஊடகத்துறையினர் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்ததை ஏற்று கொண்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.