ராம் தர்ஷன் அபியான் யாத்திரை ஏற்பாடு

December 26, 2023

வருகிற ஜனவரி 22 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி உத்திர பிரதேசம் அயோத்தியில் ராமர் கோவிலை திறந்து வைக்க உள்ளார். அயோத்தி ராமர் கோவிலை திறந்து வைப்பதற்காக பல்வேறு முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இங்கு பாதுகாப்பு கருதி பொதுமக்கள் இவ்விழாவிற்கு வர வேண்டாம் என ராம ஜென்ம பூமி அறக்கட்டளை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் இலவசமாக தரிசனம் செய்ய பா.ஜா. கா சார்பில் ஆன்மீக பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட […]

வருகிற ஜனவரி 22 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி உத்திர பிரதேசம் அயோத்தியில் ராமர் கோவிலை திறந்து வைக்க உள்ளார்.

அயோத்தி ராமர் கோவிலை திறந்து வைப்பதற்காக பல்வேறு முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இங்கு பாதுகாப்பு கருதி பொதுமக்கள் இவ்விழாவிற்கு வர வேண்டாம் என ராம ஜென்ம பூமி அறக்கட்டளை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் இலவசமாக தரிசனம் செய்ய பா.ஜா. கா சார்பில் ஆன்மீக பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் மற்றும் பீகார் மாநிலத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. மேலும் இந்த நிலையில் நாடு முழுவதும் 5 கோடி பேர் இலவசமாக தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக ராம் தர்ஷன் அபியான் பெயரில் ஜனவரி 24ஆம் தேதி ஆன்மீக யாத்திரை தொடங்கி மார்ச் 24 வரை நடைபெற உள்ளது. இதற்காக 275 சிறப்பு ரயில் ரயில்வே துறையில் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.

மேலும் இதில் உணவு உள்ளிட்ட சகல வசதிகளுடன் இலவசமாக 5 கோடி பேரும் பயணம் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விழாவை பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இராமர் கோவில் திறப்பு விழாவிற்காக உபி அரசு ரூபாய் 100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu