நாசாவின் ஆர்டெமிஸ் 3 திட்டத்தில், மனிதர்கள் நிலவுக்கு அனுப்பப்பட உள்ளனர். அந்த வகையில், ஆர்டெமிஸ் 3 விண்வெளி வீரர்களுக்கான பிரத்யேக உடை வடிவமைக்கப்பட்டு வருகிறது. தற்போது, விண்வெளி வீரர்கள் இத்தாலியைச் சேர்ந்த பிரபல பேஷன் நிறுவனமான பிரதா நிறுவனம் வடிவமைக்கும் உடைகளை அணிய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
ஆர்டெமிஸ் 3 விண்வெளி வீரர்களுக்கான உடையை ஆக்ஸியம் ஸ்பேஸ் சிஸ்டம்ஸ நிறுவனத்துடன் இணைந்து பிரதா நிறுவனத்தின் பொறியாளர்கள் வடிவமைக்கின்றனர். பல்வேறு நவீன அம்சங்களை கொண்டு, நிலவின் சூழலுக்கு ஏற்ப, இந்த உடைகள் வடிவமைக்கப்படுவதாக நாசா தெரிவித்துள்ளது. நாசாவின் நிலவு திட்டத்தில் பங்கேற்பது கொண்டாடப்பட வேண்டிய ஒன்று என பிரதா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் லாரன்சோ பெர்தெல்லி அறிவித்துள்ளார்.