ஐநா சபையின் பொது செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், சட்டப்பிரிவு 99 ஐ பயன்படுத்த திட்டமிட்டுள்ளார். அதனை பயன்படுத்தி, இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது.
ஐநா சபையை பொறுத்தவரை, 193 உறுப்பு நாடுகள் மற்றும் பாதுகாப்பு அவையில் உள்ள 15 நாடுகள் ஆகியவற்றின் வாக்களிப்பை பொருத்து தான் முடிவுகள் எடுக்கப்படும். ஆனால், சட்ட பிரிவு 99 படி, ஐநா செயலாளருக்கு சிறப்பு உரிமைகள் வழங்கப்படுகிறது. அதன்படி, மனித பேரழிவை ஏற்படுத்தும் போர்களை நிறுத்த அன்டோனியோ குட்டெரஸ் திட்டமிட்டுள்ளார். அவரது தீர்மானத்துக்கு ஆதரவாக அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் உள்ளன. ஆனால், அமெரிக்கா இந்த தீர்மானத்துக்கு உடன் படாது என கருதப்படுகிறது. இதற்கு முன்னதாக, கடந்த 1971 ஆம் ஆண்டு, இந்தியா பாகிஸ்தான் போரின் போது இந்த சட்டப்பிரிவு பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.