நேற்று, அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தின் லெப்டினெண்ட் கவர்னர் பதவிக்கு நடந்த தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அருணா மில்லர் வெற்றி பெற்றுள்ளார். இந்தியர் ஒருவர் அமெரிக்காவின் லெப்டினன்ட் கவர்னர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். அவரது வெற்றிக்கு ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
58 வயதாகும் அருணா மில்லர், ஆந்திர பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்டவர் ஆவார். அவர், இந்து தேசியவாதிகளுக்கு சாதகமாக செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இருந்த போதிலும், அவர் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
வெற்றிக்குப் பின்னர் பேசிய அவர், "வலிமைமிக்க நாட்டில் ஜனநாயகம் இருந்தால் எத்தகைய மாற்றங்கள் நேரும் என்பதை இந்த தேர்தல் உணர்த்துகிறது. மேரிலேண்ட் மக்களாகிய உங்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.














