அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நான்காவது முறையாக சம்மன்

January 13, 2024

அமலாக்கத் துறையினர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நான்காவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லி அரசின் மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்தது. இதனை அடுத்து அவருக்கு மூன்று முறை விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் இதுவரை கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. மேலும் இந்த சம்மன் சட்ட விரோதமானது. இதனை திரும்ப பெற வேண்டும் எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தற்போது […]

அமலாக்கத் துறையினர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நான்காவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.
டெல்லி அரசின் மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்தது. இதனை அடுத்து அவருக்கு மூன்று முறை விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் இதுவரை கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. மேலும் இந்த சம்மன் சட்ட விரோதமானது. இதனை திரும்ப பெற வேண்டும் எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தற்போது நான்காவது முறையாக அமலாக்கத்துறை கெஜ்ரிவாலுக்கு வருகிற 18-ஆம் தேதி ஆஜராகும் படி சம்மன் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் தன்னை கைது செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் சமன் அனுப்பப்படுகிறது என குற்றம் சாட்டி வருகிறார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu