சூடானில் பஞ்சம் காரணமாக மக்கள் உயிர் வாழ இலைகள் மற்றும் மண் போன்றவற்றை சாப்பிடும் அளவுக்கு அவல நிலை ஏற்பட்டுள்ளது.
சூடானில் கடந்த ஒரு வருடமாக ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே போர் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டு போர் இன்றுவரை தணியவில்லை. இதனால் மக்கள் பாதிப்படைந்து பசி, பட்டினியால் வாடி வருகின்றனர். அங்கு தற்போது 49 மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர். இதில் 18 மில்லியன் மக்கள் உணவு தட்டுப்பாடு காரணமாக பசியால் வாடி வருவதாக கூறப்படுகிறது. இந்த போரில் காயமடைந்த மக்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அங்குள்ள விவசாய பயிர்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். இதனால் மலேரியா மற்றும் பிற நோய்கள் வேகமாக பரவி வருகின்றன. இதனால் விவசாயிகள் நடவுக்காக வாங்கிய விதைகளை தாங்களே சாப்பிடுகின்றனர். அதோடு உயிர் வாழ இலைகள் மற்றும் மண் போன்றவற்றை சாப்பிடும் அளவுக்கு அவல நிலை ஏற்பட்டுள்ளது.
சூடான் மக்களுக்கு சர்வதேச நிறுவனங்களின் உதவிகள் வந்தாலும் அதனை மக்களுக்கு சேரவிடாமல் இராணுவம் தடுக்கிறது. இதனால் பெரிய அளவில் பட்டினி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.