200 கோ ஃபர்ஸ்ட் விமானிகள் ஏர் இந்தியாவில் இணைந்தனர்

May 30, 2023

கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் திவால் நிலையில் உள்ளது. நிறுவனத்தின் திவால் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. விமான சேவைகள் அடுத்த வாரம் வரை நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், விமான நிறுவனத்தில் பணியாற்றி வரும் விமானிகள் கிட்டத்தட்ட 200 பேர், ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதிலும் குறிப்பாக, 75 விமானிகள் ஏர் இந்தியாவில் பயிற்சியை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. விமானிகள் அனைவரும் வெளியேறி வரும் சூழலில், நிறுவனம் அவர்களை தக்க வைக்க முயற்சித்து வருகிறது. அதன்படி, கூடுதலாக […]

கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் திவால் நிலையில் உள்ளது. நிறுவனத்தின் திவால் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. விமான சேவைகள் அடுத்த வாரம் வரை நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், விமான நிறுவனத்தில் பணியாற்றி வரும் விமானிகள் கிட்டத்தட்ட 200 பேர், ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதிலும் குறிப்பாக, 75 விமானிகள் ஏர் இந்தியாவில் பயிற்சியை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

விமானிகள் அனைவரும் வெளியேறி வரும் சூழலில், நிறுவனம் அவர்களை தக்க வைக்க முயற்சித்து வருகிறது. அதன்படி, கூடுதலாக ஒரு லட்சம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்க முன் வந்துள்ளது. விமான நிறுவனத்தில், தற்போதைய நிலையில், 500 விமானிகள் உள்ளதாக கருதப்படுகிறது. எனவே, ஒருவேளை கோ ஃபர்ஸ்ட் விமான சேவைகள் மீண்டு வந்தால், இவர்களை வைத்து விமானங்களை இயக்க முடியும் என்று கருதப்படுகிறது. அதை வேளையில், இண்டிகோ உள்ளிட்ட பிற விமான நிறுவனங்களும் கூடுதல் விமானங்களை பணி அமர்த்த திட்டமிட்டு வருகின்றன. எனவே, அதிக எண்ணிக்கையிலான கோ ஃபர்ஸ்ட் விமானிகள் வேறு நிறுவனங்களுக்கு செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu