சத்தீஸ்கரின் புதிய முதல்வராக வி. டி சாய் தேர்வு

December 11, 2023

சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக நவம்பர் 7 மற்றும் 17ஆம் தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சியும் காங்கிரஸும் நேருக்கு நேர் தீவிரமாக களம் இறங்கியது. இதன் தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்பட்டது. அதில் 46.27% ஓட்டுக்களை பாஜக பெற்று 54 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் உரிமையை பெற்றுள்ளது. தேர்தலின் […]

சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக நவம்பர் 7 மற்றும் 17ஆம் தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சியும் காங்கிரஸும் நேருக்கு நேர் தீவிரமாக களம் இறங்கியது. இதன் தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்பட்டது. அதில் 46.27% ஓட்டுக்களை பாஜக பெற்று 54 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் உரிமையை பெற்றுள்ளது. தேர்தலின் போது முதல்வர் வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் பாஜக முதல்வர் ராமன் சிங்கிற்க்கு நெருக்கமானவரும், பாஜகவின் தேசிய செயல் கமிட்டியின் உறுப்பினருமான விஷ்ணு தியோ சாய் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 1990 இல் அரசியலில் நுழைந்தவர். 2006 இல் பாஜகவின் சட்டீஸ்கர் மாநில தலைமை பொறுப்பை ஏற்று நீண்ட அரசியல் அனுபவம் உடையவர். 2017 ஆம் ஆண்டு பாஜகவின் மத்திய அமைச்சரவையில் எக்கு துறை இணை அமைச்சராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu