கத்தாரில் 2024 ஆம் ஆண்டிற்கான ஆசியான் கோப்பை கால் பந்து போட்டி ஜனவரி 12ஆம் தேதி முதல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடக்க இருக்கிறது.
ஆசியான் கோப்பை கால்பந்து போட்டியில் 24 நாடுகள் பங்கேற்கின்றன. அவை ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் பி பிரிவில் இந்திய அணி, ஆஸ்திரேலிய, உஸ்பெகிஸ்தான், சிரியா ஒரு ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. ஏ பிரிவில் போட்டியை நடத்தும் கத்தார் அணி, சீனா, தஜிகிஸ்தான், லெபனான் அணிகளும், சி பிரிவில் ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பாலஸ்தீன், டி பிரிவில் ஜப்பான், இந்தோனேசியா, ஈராக்,வியாட்னாம், ஈ பிரிவில் தென்கொரியா,மலேசியா, ஜோர்டான், பக்ரைன், எப் பிரிவில் சவுதி அரேபியா,தாய்லாந்து, கிர்கிஸ்தான், ஓமன் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் ஒவ்வொரு பிரிவிலும் லீக் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி மூன்றாவது இடத்தை பிடிக்கும் நான்கு சிறந்த அணிகளும் நாக்கவுட் சுற்றுக்கு முன்னேறுகிறது. இந்திய அணி வரும் 13ஆம் தேதி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ளது. அதனை தொடர்ந்து 18ஆம் தேதி உஸ்பெகஸ்தான் அணியுடனும், சிரியாவுடன் 23ஆம் தேதியும் மோதுகின்றன.














