ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அதன் தலைமை நிதி அதிகாரியாக ஆஷிஷ் குமாரை நியமித்துள்ளது.
அவரின் பதவி நியமனம் செப்டம்பர் 9 முதல் அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளது.
பணப்புழக்க நெருக்கடியை எதிர்கொண்டுள்ள ஸ்பைஸ்ஜெட், முடிவடைந்த காலாண்டில் ரூ.784 கோடி இழப்பை சந்தித்தது. இந்நிலையில் அதன் தலைமை நிதி அதிகாரியான சஞ்சீவ் தனேஜாவே
ஆகஸ்ட் 31 அன்று ஸ்பைஸ்ஜெட் ஐ விட்டு வெளியேறியதை அடுத்து ஆஷிஷ்குமார் பதவியேற்றார். இவர் இதற்கு முன் 2019 முதல் இன்டர்குளோப் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் கார்ப்பரேட் நிதிக்கான துணைத் தலைவராக பணியாற்றினார். இது குறித்து ௯றிய ஸ்பைஸ்ஜெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அஜய் சிங் , நிறுவனம் பணநெ௫க்கடியில் உள்ள இச்சமயத்தில் போக்குவரத்துத் துறையில் சிறந்த அனுபவம் உள்ள ஆஷிஷின் முயற்சி நிறுவனத்தை வெற்றிகரமாக வழிநடத்தும் எனக் கூறினார்.














