தமிழ்நாடு போக்குவரத்து கழகத்திற்கு 552 புதிய பேருந்துகளை அசோக் லேலண்ட் நிறுவனம் வழங்க உள்ளது. தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தின் மிகப்பெரிய ஆர்டரை கையகப்படுத்தியதாக அசோக் லேலண்ட் அண்மையில் அறிவித்துள்ளது.
அசோக் லேலண்ட் நிறுவனம், தமிழ்நாடு போக்குவரத்து கழகத்துக்கு இதுவரை 18477 பேருந்துகளை வழங்கியுள்ளது. தற்போது, மேலும் 552 பேருந்துகளுக்கான ஆர்டரும் அசோக் லேலண்ட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த சில மாதங்களுக்குள் புதிய பேருந்துகள் வழங்கப்படும் என அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் நம்பிக்கையை பெற்றுள்ளதற்கு அசோக் லேலண்ட் நிர்வாக இயக்குனர் ஷேனு அகர்வால் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.