பிரபல சரக்கு வாகன உற்பத்தியாளரான அசோக் லேலண்ட், ஜனவரி மாத வாகன விற்பனையில் 23% உயர்வை பதிவு செய்துள்ளது. ஜனவரி மாதத்தில் அசோக் லேலாண்ட் வாகனங்கள் 17200 எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நடுத்தர மற்றும் இலகு ரக சரக்கு வாகனங்களின் உள்நாட்டு விற்பனை 16198 ஆக பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டு ஜனவரி மாத விற்பனையை விட 27% கூடுதலாகும். மேலும், நடுத்தர மற்றும் கனரக வாகனங்களின் உள்நாட்டு விற்பனை 10108 எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 34% கூடுதலாகும். மேலும், ஜனவரி மாதத்தில், இலகுரக வாகனங்கள் உள்நாட்டு விற்பனையில் 18% உயர்வு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் 6090 இலகுரக வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.