தைவானில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவாகியுள்ளது.தைவான் ரிங் ஆப் பயர் என்ற பகுதியில் அமைந்துள்ளது. இதனாலேயே அங்கே அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், தைவானின் வடகிழக்கு பகுதியில் 171 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.