ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிலிருந்து (AIIB) BRACE மேம்பாட்டுத் திட்டத்திற்கான இணை நிதியுதவியாக பாகிஸ்தான் 500 மில்லியன் டாலர்கள் பெறும் என்று அந்நாட்டின் நிதியமைச்சர் இஷாக் டார் தெரிவித்தார்.
BRACE (Building Resilience with Active Counteryclical Expenditures Program) என்பது பொருளாதார நெருக்கடியின் பொது ஏற்படும் சமூக பிரச்சனைகளை எதிர்கொள்ள உதவும் ஒரு ஆசிய வளர்ச்சி வங்கி நிதியளிப்பு திட்டமாகும். இந்த தொகையை பாகிஸ்தான் ஸ்டேட் வங்கி நவம்பர் மாதத்திற்குள் பெற்றுக்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பாகிஸ்தானில் ஏற்பட்ட புயல் வெள்ளம் காரணமாக அந்நாடு பெரும் சேதத்தை எதிர்கொண்டது. அதனையடுத்து உலக வாங்கி மற்றும் பிற நாடுகள் அந்நாட்டிற்கு பல்வேறு உதவிகள் செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகவே இந்த நிதி வழங்கப்படுகிறது.














