19 ஆவது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சேவ் நகரில் 7 ஆவது நாளாக நடைபெற்று வருகிறது.
சீனாவின் ஹாங்சேவ் நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டி 2023 வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர் வீராங்கனைகள் பங்கு பெற்று விளையாடி வருகின்றனர். இதுவரை இந்தியா 32 பதக்கங்களை பெற்று பதக்க பட்டியலில் நான்காவது இடம் வகிக்கிறது. தற்போது இந்தியா 8 தங்கம், 12 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 32 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.