இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது. ஆண்கள் அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23-ம் தேதி முதல் அக்டோபர் 8-ம் தேதி வரை நடக்கிறது. இதில் மொத்தம் 40 வகையான விளையாட்டுகள் இடம் பெறுகிறது. இதில் கிரிக்கெட்டும் ஒன்று. இந்த முறை ஆசிய விளையாட்டு போட்டிக்கு கிரிக்கெட் அணிகளை அனுப்ப இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே முடிவு செய்திருந்தது. இந்நிலையில், ஆசிய விளையாட்டுக்குச் செல்லும் இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது. ஆண்கள் அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.