ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் லாபம் 31% உயர்வு

October 21, 2022

ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் தனது இரண்டாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், நிறுவனத்தின் வருடாந்திர லாபம் 31% உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலாண்டு நிதிநிலை அறிக்கையை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அமித் சிங்கால் வெளியிட்டார். தொடர்ந்து நடைபெற்ற நிர்வாகக் குழு உறுப்பினர்களின் சந்திப்பில், நிறுவனத்தின் ஒரு ஈக்விட்டி பங்கிற்கு 4.4 ரூபாய் டிவிடெண்ட் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. மேலும், தொடர்ந்து ஆறு காலாண்டுகளாக நிறுவனத்தின் வருவாய் உயர்ந்து வருவது குறித்து, அமித் சிங்கால் மகிழ்ச்சி தெரிவித்தார். அத்துடன், […]

ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் தனது இரண்டாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், நிறுவனத்தின் வருடாந்திர லாபம் 31% உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலாண்டு நிதிநிலை அறிக்கையை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அமித் சிங்கால் வெளியிட்டார். தொடர்ந்து நடைபெற்ற நிர்வாகக் குழு உறுப்பினர்களின் சந்திப்பில், நிறுவனத்தின் ஒரு ஈக்விட்டி பங்கிற்கு 4.4 ரூபாய் டிவிடெண்ட் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. மேலும், தொடர்ந்து ஆறு காலாண்டுகளாக நிறுவனத்தின் வருவாய் உயர்ந்து வருவது குறித்து, அமித் சிங்கால் மகிழ்ச்சி தெரிவித்தார். அத்துடன், நிறுவனத்தின் தொடர் முன்னேற்றத்தை மேலும் மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதி செய்தார்.

நிறுவனம் வெளியிட்டுள்ள காலாண்டு நிதிநிலை அறிக்கை விவரங்கள் வருமாறு: கடந்த செப்டம்பர் மாத இறுதியில், நிறுவனத்தின் வருடாந்திர லாபம் 782.71 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு இது 595.96 கோடி ரூபாயாக பதிவானது. எனவே, வருடாந்திர அடிப்படையில், 31.3% வளர்ச்சி பதிவாகியுள்ளது. மேலும், விற்பனை அடிப்படையில், நிறுவனம் 19.8% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த வருடத்தில் 7036.51 கோடி ரூபாயாக இருந்த விற்பனை மதிப்பு, இந்த வருடத்தில் 8430.60 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும், வரிக்கு முன்னான லாபம் 32.4% உயர்ந்துள்ளது. கடந்த வருடத்தில் 826.24 கோடியாக இருந்த வரிக்கு முன்னான லாபம், இந்த வருடம் 1094.16 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. சர்வதேச வணிகத்தை பொறுத்தவரை, ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் விற்பனை 15.3% உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டு 699.28 கோடி ரூபாயாக இருந்த சர்வதேச விற்பனை மதிப்பு, இந்த வருட செப்டம்பர் மாத இறுதியில் 805.99 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu