ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் தனது முதலாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம் 52.5% உயர்ந்து 1550.37 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. நிறுவனத்தின் மொத்த வருவாய் 7% உயர்ந்து 9182.31 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
வருடாந்திர அடிப்படையில், ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம் 36.3% உயர்ந்து 2121.3 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவாக, நிறுவனத்தின் மார்ஜின் வேல்யூ 23.2% ஆக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 18.1% ஆகவும், முந்தைய காலாண்டில் 21.3% ஆகவும் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை வெளியான பின்னர், ஏசியன் பெயிண்ட்ஸ் பங்குகள் 5% வரை சரிந்து வர்த்தகமாகி வருகின்றன.