ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் தனது மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 5.6% உயர்ந்து, 1073 கோடியாக பதிவாகி உள்ளது. மேலும், நிறுவனத்தின் வருவாய் 1.3% உயர்ந்து, 8636.74 கோடியாக பதிவாகியுள்ளது. மேலும், கடந்த காலாண்டில், நிறுவனத்தின் சர்வதேச விற்பனை 2.1% உயர்ந்து, 778.82 கோடியாக பதிவாகியுள்ளது.
அதே வேளையில், நிறுவனத்தின் கிளையாகச் செயல்படும் பாத்ரூம் பிட்டிங்ஸ் மற்றும் சமையலறை சார்ந்த வர்த்தகம் சரிவை சந்தித்துள்ளது. பாத்ரூம் பிட்டிங்ஸ் துறையில் 11% சரிவு பதிவாகி, 89.84 கோடி மதிப்பில் வர்த்தகம் நடைபெற்றுள்ளது. மேலும், சமையலறை சார்ந்த வர்த்தகம் 7% சரிந்து, 100.68 கோடியாக பதிவாகியுள்ளது. அத்துடன், வருடாந்திர அடிப்படையில், நிறுவனத்தின் மார்ஜின் 57 அடிப்படை புள்ளிகள் உயர்ந்து 18.66 சதவீதமாக பதிவாகியுள்ளது. மேலும், அக்டோபர் - நவம்பர் மாதங்களில் பருவ மழை காரணமாக சரிந்த வருவாய், டிசம்பர் மாதத்தில் உயர்ந்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.