வந்தே பாரத் ரெயிலை இயக்கிய ஆசியாவின் முதல் பெண் லோகோ பைலட்

March 14, 2023

வந்தே பாரத் ரெயிலை இயக்கிய முதல் பெண் ஓட்டுனர் என்ற பெருமையை சுரேகாயாதவ் பெற்றுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் சதாரா பகுதியை சேர்ந்தவர் சுரேகா யாதவ். 55 வயதான இவர் ஆசியாவில் முதல் பெண் லோகோ பைலட் என்ற பெருமையை பெற்றவர். கடந்த 1988-ம் ஆண்டு முதல் பெண் லோகோ பைலட் சான்றிதழை பெற்றார். அவரது சாதனைகளுக்காக அவர் மாநிலம் மற்றும் தேசிய அளவில் விருதுகள் பெற்றுள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மும்பை-லக்னோ […]

வந்தே பாரத் ரெயிலை இயக்கிய முதல் பெண் ஓட்டுனர் என்ற பெருமையை சுரேகாயாதவ் பெற்றுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் சதாரா பகுதியை சேர்ந்தவர் சுரேகா யாதவ். 55 வயதான இவர் ஆசியாவில் முதல் பெண் லோகோ பைலட் என்ற பெருமையை பெற்றவர். கடந்த 1988-ம் ஆண்டு முதல் பெண் லோகோ பைலட் சான்றிதழை பெற்றார். அவரது சாதனைகளுக்காக அவர் மாநிலம் மற்றும் தேசிய அளவில் விருதுகள் பெற்றுள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மும்பை-லக்னோ சிறப்பு ரெயிலை இயக்கிய அனைத்து பெண்களும் கொண்ட முதல் பெண் லோகோ பைலட் ஆனார்.

இந்நிலையில் தற்போது சுரேகா யாதவ் மகாராஷ்டிரத்தில் உள்ள சோலாபூரில் இருந்து சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினல் வரை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்கி உள்ளார். இதன் மூலம் வந்தே பாரத் ரெயிலை இயக்கிய முதல் பெண் ஓட்டுனர் என்ற பெருமையை சுரேகாயாதவ் பெற்றுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu