கூட்டுறவு அமைப்புகள் மூலம் பால் விற்பனை செய்பவர்களுக்கு லிட்டருக்கு 5 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று அசாம் மாநில அரசு தெரிவித்துள்ளது. அசாம் தலைநகர் கௌஹாத்தியல், அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், பாலுக்கு மானியம் வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
அசாம் போன்ற வெள்ளத்தால் பாதிப்படையும் மாநிலத்திற்கு, பல்வேறு வகையில், மத்திய அரசு நிதி உதவிகள் வழங்கி வருவதாக விழாவில் அவர் கூறினார். மேலும், இந்த விழாவில், மத்திய அரசின் பல்வேறு விவசாயிகள் நல நிதி திட்டங்களுக்கான நிதியை விவசாயிகளுக்கு வழங்கினார்.