இருநூறு தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.ராஜஸ்தானில் உள்ள 200 தொகுதிகளில் ஸ்ரீகங்கா நகர் கரன்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மரணமடைந்ததால் மட்டும் அங்கு வாக்குப்பதிவு நடைபெறவில்லை. மீதமுள்ள 199 வாக்குச் சாவடிகளில் இன்று காலை ஆறு மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இந்த தொகுதிகளில் மொத்தம் 5,25,38,105 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 51 ஆயிரத்து 57 வாக்குச்சாவடிகள் தொகுதி முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு பணியில் 1.7 லட்சத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதன் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் மூன்றாம் தேதி நடைபெற உள்ளது . தற்போது ஒரு மணி நேர தேர்தல் நிலவரப்படி 40% வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ளன.