கர்நாடக மாநிலத்தில் மே.10-ம் தேதி சட்டமன்ற தேர்தல்  

March 29, 2023

கர்நாடக மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார் தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், கர்நாடக சட்டப்பேரவை பதவிக்காலம் மே 24ஆம் தேதி முடிவடைகிறது. எனவே மே மாதம் 24-ம் தேதிக்குள் தேர்தல் நடைமுறைகள் முடிவடையும். கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. […]

கர்நாடக மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், கர்நாடக சட்டப்பேரவை பதவிக்காலம் மே 24ஆம் தேதி முடிவடைகிறது. எனவே மே மாதம் 24-ம் தேதிக்குள் தேர்தல் நடைமுறைகள் முடிவடையும். கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 20 வரை நடைபெறுகிறது. வேட்புமனு மீதான பரிசீலனை ஏப்ரல் 21-ம் தேதி நடைபெறும். வேட்புமனுவை திரும்பப்பெற ஏப்ரல் 24 கடைசிநாள் ஆகும். இதனை அடுத்து கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் மே10 ஆம் தேதி நடைபெறும். மேலும் மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu