2000 வருடங்களுக்கு ஒரு முறை, கால்பந்து மைதான அளவிலான விண்கல் பூமியுடன் மோதி, பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதாக நாசா தெரிவித்துள்ளது. ஆனால், சமீபத்தில், இத்தகைய பெரிய அளவிலான விண்கற்கள் எதுவும் பூமியை நோக்கி வரவில்லை. தற்போது, ஏ380 ஏர்பஸ் விமானத்தை விட பெரிய விண்கல் ஒன்று பூமியை நோக்கி வருவதாக நாசா எச்சரித்துள்ளது. ஆனால், இதுவும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய அளவு பெரிய விண்கல் இல்லை என்று தெரிவித்துள்ளது. இதன் அளவு 147 அடி முதல் 328 அடிவரை இருக்கும் என்று நாசா கணித்துள்ளது.
2019XS என்ற விண்கல், ஒரு மணி நேரத்திற்கு 42727 கிலோமீட்டர் என்ற வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. கடந்த 2000 ம் ஆண்டு கண்டறியப்பட்ட இந்த விண்கல், அப்பல்லோ குழுமத்தை சேர்ந்ததாகும். இது 368 நாட்களில் சூரியனை சுற்றி வருகிறது. தற்போது அது, பூமியை 6.4 மில்லியன் கிலோமீட்டர் தொலைவு வரை நெருங்கும் என்று நாசா கணித்துள்ளது.