கடந்த ஜூன் 22ம் தேதி சர்வதேச வானியல் ஒன்றியம் (IAU), 198 விண்கற்களுக்கு வானியல் துறையில் மிகவும் பங்களிப்பை வழங்கிய விஞ்ஞானிகளின் பெயர்களை சூட்டி கௌரவித்தது. பல நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அந்த வகையில், 4 இந்தியர்கள் இதில் இடம் பிடித்துள்ளனர். இது, இந்தியாவிற்கும் இந்தியர்களுக்கும் மிகவும் பெருமைமிக்க தருணமாக கூறப்பட்டுள்ளது.
Asteroid 2000HD73 என்ற விண்கல்லுக்கு குஜராத்தை சேர்ந்த வானியல் அறிஞர் ருது பாரேக் பெயர் சூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர், தற்போதைய நிலையில், நாசாவில் பணியாற்றி வருகிறார். மேலும், Asteroid 2000SM362 என்ற விண்கல்லுக்கு அகமதாபாத் விஞ்ஞான குமார் வெங்கட்ரமணி பெயர் சூட்டப்படுகிறது. சுருக்கமாக குமார் என்று இந்த விண்கல் அழைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும், அஸ்வின் சேகர் மற்றும் அசோக் வர்மா ஆகிய விஞ்ஞானிகளின் பெயர்களிலும் விண்கற்கள் அழைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.