சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சமீபத்தில் விண்வெளி வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். அதில், துருக்கி, ஸ்வீடன் மற்றும் இத்தாலி நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
நாசாவின் கென்னடி ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் ராக்கெட் மூலம் விண்வெளி வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். நாளை, அவர்கள் விண்வெளி நிலையத்தை சென்றடைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளி நிலையத்தில் 2 வாரங்கள் தங்கி இருந்து, பல்வேறு ஆய்வுகளில் அவர்கள் ஈடுபட உள்ளனர். மேலும், பள்ளிக் குழந்தைகளிடம் உரையாடல் நடத்த உள்ளனர். அதன் பிறகு பூமி திரும்புவதாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முறை விண்வெளி நிலையம் செல்லும் ஆல்பர் காசராவ்சி, துருக்கி நாட்டில் இருந்து விண்வெளிக்கு செல்லும் முதல் நபராக வரலாறு படைத்துள்ளார்.