ஆக்சியம்-4 மிஷனில் ஈடுபட்ட சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினர்

இந்திய விண்வெளி வரலாற்றில் முக்கியமாகத் திகழும் ஆக்சியம்-4 திட்டத்தில் பங்கேற்ற சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேரும் விண்வெளி நிலையத்தில் 18 நாள் பணி முடித்துவிட்டு பசிபிக் கடலில் பத்திரமாக தரையிறங்கினர். அமெரிக்கா, ஹங்கேரி, போலந்து மற்றும் இந்தியாவைச் சேர்ந்த நான்கு விண்வெளி வீரர்கள் கடந்த மாதம் 25-ம் தேதி ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தில் புறப்பட்டு, 28 மணி நேர பயணத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தனர். அங்கு 60க்கும் மேற்பட்ட விஞ்ஞான ஆய்வுகளில் ஈடுபட்டனர், […]

இந்திய விண்வெளி வரலாற்றில் முக்கியமாகத் திகழும் ஆக்சியம்-4 திட்டத்தில் பங்கேற்ற சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேரும் விண்வெளி நிலையத்தில் 18 நாள் பணி முடித்துவிட்டு பசிபிக் கடலில் பத்திரமாக தரையிறங்கினர்.

அமெரிக்கா, ஹங்கேரி, போலந்து மற்றும் இந்தியாவைச் சேர்ந்த நான்கு விண்வெளி வீரர்கள் கடந்த மாதம் 25-ம் தேதி ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தில் புறப்பட்டு, 28 மணி நேர பயணத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தனர். அங்கு 60க்கும் மேற்பட்ட விஞ்ஞான ஆய்வுகளில் ஈடுபட்டனர், இதில் இஸ்ரோவின் 7 சோதனைகள் அடங்கும். அவர்கள் நேற்று மாலை பூமிக்குத் திரும்ப, இன்று மதியம் கலிபோர்னியா கடற்கரையில் பாதுகாப்பாக தரையிறங்கினர். மீட்பு குழு உடனடியாக நடவடிக்கை எடுத்து மருத்துவ பரிசோதனைகளுக்காக அழைத்துச் சென்றது. சுபான்ஷு சுக்லாவின் இந்த பயணம், இஸ்ரோவின் எதிர்கால திட்டங்களுக்கு உந்துசக்தியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu