சர்வதேச விண்வெளி நிலையத்தை வெற்றிகரமாக அடைந்த டிராகன் விண்கலம்

நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்கள் இணைந்து, டிராகன் விண்கலம் மூலம் விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பியது. டிராகன் விண்கலம் பால்கன் 9 ராக்கெட்டில் இருந்து பிரிந்து, 25 மணி நேரங்கள் கழித்து, சர்வதேச விண்வெளி நிலையத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, வெள்ளிக்கிழமை அன்று, இந்த விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைந்துள்ளது. விண்கலத்தில் இருந்த 2 அமெரிக்க விண்வெளி வீரர்கள், ஒரு ரஷ்ய வீரர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தைச் […]

நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்கள் இணைந்து, டிராகன் விண்கலம் மூலம் விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பியது. டிராகன் விண்கலம் பால்கன் 9 ராக்கெட்டில் இருந்து பிரிந்து, 25 மணி நேரங்கள் கழித்து, சர்வதேச விண்வெளி நிலையத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, வெள்ளிக்கிழமை அன்று, இந்த விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைந்துள்ளது. விண்கலத்தில் இருந்த 2 அமெரிக்க விண்வெளி வீரர்கள், ஒரு ரஷ்ய வீரர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த 1 வீரர் ஆகியோர் பத்திரமாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் சென்றுள்ளனர்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி இருந்து ஆய்வு மேற்கொண்டு வந்த வீரர்களுக்கு மாற்றாக இவர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். அதன்படி, அமெரிக்காவின் பிராங்க் ரூபியோ, ரஷ்யாவின் செர்கெய் ப்ரோகோபியேவ், டிமிட்ரி பீட்டலின் ஆகியோருக்கு மாற்றாக, ஸ்டீபன் பௌவன், வாரன் ஹோபர்க், அன்டிரே பெத்யேவ், அல் நெயாடி ஆகியோர், சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள உள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu