இந்திய அரசு வெளியிட்டுள்ள தகவல்கள் படி, கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவின் யுபிஐ பரிவர்த்தனைகள் 8.7 பில்லியனை தொட்டுள்ளன. இது வருடாந்திர அடிப்படையில் 60% உயர்வாகும். மேலும், யுபிஐ பரிவர்த்தனை எண்ணிக்கையில் இது புதிய உச்சம் ஆகும்.
கடந்த ஜனவரி மாதத்தில், முதல் முறையாக 8 பில்லியன் இலக்கை தாண்டி யுபிஐ பரிவர்த்தனை எண்ணிக்கை பதிவானது. ஆனால், அதைத் தொடர்ந்த பிப்ரவரி மாதத்தில், 28 நாட்களே இருந்ததால், 7.5 பில்லியனாக யுபிஐ பரிவர்த்தனை எண்ணிக்கை குறைந்தது. ஆனால், மார்ச் மாதத்தில் யுபிஐ பரிவர்த்தனைகள் உயர்ந்து, புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. யுபிஐ பரிவர்த்தனை மதிப்பு அடிப்படையில், கடந்த மார்ச் மாதத்தில், வரலாற்று உச்சமாக 14.05 ட்ரில்லியன் ரூபாய் யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது வருடாந்திர அடிப்படையில் 46% உயர்வாகும்.